இலங்கையின் இன்றைய மோசமான அரசியல்-பொருளாதாரச் சூழல் தமிழர்களை எவ்வகையில் பாதித்திருக்கிறது என்று ஆராய்கிறது இக்கட்டுரை.
என் மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று உலகத்தில் பிரகடனப்படுத்திய ஒரே நாடு என்ற சாதனையை இலங்கை கடந்த வாரம் பதித்தது. ‘ஜுலை மாதம் 22ம் தேதி வரை எந்த எரிபொருள் கப்பலும் நாட்டிற்குள் வராது’ என்று பிரதமர் ரணிலின் அறிவிப்பு வெளியாகி, நிலைமை படு மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. பொதுப் போக்குவரத்து ஒட்டுமொத்தமாய் செத்துப் போய் இருக்க பள்ளிகள் எல்லாம் காலவரையின்றி மூடுவிழா கண்டிருக்கின்றன. கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் கடையை நிரந்தரமாய் சாத்திக் கொண்டு வெளியேறுவது பற்றி யோசித்து கொண்டு இருப்பதாக மேல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comment