சென்னையில் ஓர் அண்ணன்
உமா சந்திரன் எழுதிய ஒரு நாவலில் ஒரு பகுதி. அதைக் கொண்டு அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கினார் இயக்குநர் மகேந்திரன். ஒளிப்பதிவு பாலு மகேந்திரா. இசை இளையராஜா.
ஷோபா தங்கையாகவும் அவருக்கு ஜோடியாகச் சரத்பாபுவும் என்று முடிவாகி விட்டது. அண்ணன் பாத்திரமான காளியாக ரஜினிகாந்த்தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் மகேந்திரன். ஆனால் தயாரிப்பாளர் வேணு செட்டியார் ஒப்புக் கொள்ளவில்லை. அவரால் இந்தப் பாத்திரத்தைத் தாங்க முடியாது. படம் ஓடாது என்று மறுத்துவிட்டார். ரஜினி நடிக்கவில்லை என்றால் படமே எடுக்கமாட்டேன் என்று உறுதியாக நின்றார் மகேந்திரன். அரை மனத்துடன் சம்மதித்தாலும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் உதவாமல் கை விரித்துவிட்டார் தயாரிப்பாளர். கமல்ஹாசன் உதவியுடன்தான் அந்தப் படத்தை முடிக்க முடிந்தது.
பாசமலருக்குப் பிறகு அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாக இன்றுவரை பாராட்டப்படுகிற அந்தப் படம்தான் முள்ளும் மலரும். ‘கெட்ட பைய சார் இந்தக் காளி’ என்ற வசனம் இன்றுவரை பிரசித்தம். தமிழக அரசின் சிறந்த படம், ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு உள்படப் பல விருதுகளை இந்தப் படம் குவித்தது.










Add Comment