Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 17
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 17

அளவற்ற கனவுகள்

‘நான் இந்தியாவின் மகிழ்ச்சியைக் கொண்டு சேர்க்க விரும்புகிறேன். அதன் பாசத்தைச் சொல்ல விரும்புகிறேன். இசையை இசைக்க விரும்புகிறேன். குடும்பங்களைப் பார்க்க விரும்புகிறேன். காதலைக் கொண்டாட விரும்புகிறேன். இங்கும் வசதியானவர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியான குடும்பங்கள் இருக்கின்றன. கொண்டாட்டங்கள் ஏராளம். அதைப் பார்ப்பதில் என்ன தவறு? இதைத்தான் என்னுடைய அலைவரிசையை ஒட்டி வரும் தயாரிப்பாளர்களும் விரும்புகிறார்கள். பரீட்சார்த்தமான படங்கள் செய்வதற்கு என்று ஒரு காலம் வரும். மக்கள் ரசனையும் மாறும். அப்பொழுது கண்டிப்பாகச் செய்வேன்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார் ஷாருக்.

மணிரத்னம் ஷாருக்கின் மனம் கவர்ந்த இயக்குநர். இவருடன் ஒரு படம் செய்தால்தான் என்னுடைய திரைப்பயணம் முழுமை பெறும் என்று வெளிப்படையாகவே சொல்லி வந்தார் ஷாருக். அப்படியான ஒரு வாய்ப்பும் வந்தது. முதலில் இவர்கள் இருவரும் இணையும் படமாக அமைய இருந்தது அலைபாயுதே இந்தி ரீமேக்தான். அது நடக்காமல் வேறொரு கதையைத் தயார் செய்தார் மணிரத்னம். அதுதான் தில்சே.

அதில் மனிஷா கொய்ராலா ஒரு தீவிரவாதி அவருக்கும் ஷாருக்குக்கும் காதல். இறுதியில் காதல் வெல்லக் காதலர்கள் வெடித்துச் சிதறுவதுதான் கதை. படம் முடியும் வரை இந்த முடிவு யாருக்கும் எந்தவிதமான எண்ணங்களையும் கொண்டு வரவில்லை. அருமையான பாடல்கள், ஒளிப்பதிவு, நடிப்பு எல்லாம் இருந்தது. ஆனால் முழுப் படமாகப் பார்த்தபிறகு அந்த முடிவு யாருக்கும் உவப்பானதாக இல்லை. விநியோகஸ்தர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!