ஜெமினி அல்லது மிதுன ராசிக்கு கேதுகாரகனால் சற்று டென்ஷன் அதிகம் என்று புத்தாண்டுப் பலன்களில் சொல்லப்பட்டிருந்தது. அதை கவனிக்காமலோ என்னவோ கூகுள் தனது செய்யறிவுச் செயலித் திட்டத்திற்கு (generative AI Project) அதே பெயரை வைத்தது. இப்போது சோதனை மேல் சோதனை என்று பாடாத குறையாக நொந்து போயிருக்கிறது...
Tag - எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-x நிறுவனத்துக்கு ஓர் எட்டுப் போய்ப் பார்த்தால், ஒன்று புரியும். அங்கே அவரது அறையின் முகப்புப் பகுதியில் ஆளுயரப் படங்கள் இரண்டைச் சுவரோவியமாக வரைந்திருப்பார்கள். ஒன்று, சிவப்பு நிறத்தில் தகதகக்கும் செவ்வாய்க்கிரகம். அடுத்தது, நீல நிறத்தில் ஜொலிக்கும், அதே செவ்வாய்கிரகம்! அவரது...
சமீப நாள்களில் எலான் மஸ்க் என்ற பெயரைக் கேட்டவுடனே நமட்டுச் சிரிப்புடன் சிலரும், ஏளனச் சிரிப்புடன் பலரும் கடந்து செல்வதைப் பார்க்கிறோம். மிகக்குறிப்பாக அவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனைத் தன் விரல் நுனிகளால் ஆட்டிவைத்து நாளொரு விதியும், பொழுதொரு வீண் கீச்சுக்களுமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்த...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க். அவர் கடந்த ஆண்டு...
பகுதி 3: எலான் மஸ்க் என்றொரு தான்தோன்றி 1984ஆம் ஆண்டு. பன்னிரண்டு வயதான சிறுவன், தான் நிரலெழுதிய ப்ளாஸ்டார் (Blastar) என்ற விடியோகேம் விளையாட்டை பிசி அண்ட் ஆபீஸ் டெக்னாலஜி (PC and Office Technology) என்ற பத்திரிகை நிறுவனத்திற்கு ஐந்நூறு டாலர்களுக்கு விற்கிறான். தான் உலகிலேயே மிகப் பணக்காரனாகப்...
பகுதி 2 வெடித்துச் சிதறிய ராக்கெட் ஏவுதலை வெற்றி என்று கொண்டாடுவது ஏன்? இந்தக் கேள்விக்கு எலான் மஸ்க் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். “ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கும் டிராகன் விண்கலத்திற்கும் நேரெதிரான சோதனை வழிமுறைகளை நாங்கள் கையாண்டு வருகிறோம். டிராகனைப் பொறுத்த வரை எந்த விதமான பலவீனத்திற்கும்...
பகுதி 1: ஸ்டார்ஷிப் சோதனை முயற்சி ஏப்ரல் 20, 2023, காலை மணி 8:30. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மெக்ஸிகோ எல்லையின் அருகே இருக்கும் போகோ சிகா (Boco Chica) என்ற கடற்கரையோர கிராமம். 120 மீட்டர் உயரம், 5000 டன் எடை கொண்ட, ஸ்டார்ஷிப் எனப் பெயரிடப்பட்ட, உலகிலேயே மிகப் பெரிய, மிகவும் சக்தி வாய்ந்த...












