சொன்னது நீதானா?
அவர் ஓர் இரும்பு வியாபாரி. நல்ல வருமானத்துடன் தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் அவரது மகளைக் காணவில்லை. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள்.
சற்று நேரத்தில் அவரது கைப்பேசிக்கு அநாமதேய அழைப்பொன்று வந்தது. சிறுமியைக் கடத்தியிருப்பதாகவும் பத்துலட்சம் தரவேண்டுமென்றும் பேரம்பேசியது ஒரு குரல். அவரும் தரத்தயாராகத்தான் இருந்தார். ஆனாலும், மறுஅழைப்பு அவருக்கு வரவேயில்லை. வேறு வழியில்லாமல் காவல்துறையை நாடினார்.
காவல்துறையின் தேடுதல் வேட்டையில் ஒருவழியாக அச்சிறுமி கிடைத்துவிட்டாள். ஆனால், உடலில் உயிர்தான் இல்லை. அருகிலுள்ள காட்டுப்பகுதியில் துப்பட்டாவால் கழுத்து நெரிபட்டுப் பிணமாகக்கிடந்தாள். காவல்துறை தன் கடமையைச் சுறுசுறுப்பாகச்செய்தது.
இருந்த ஒரே தடயம், கடத்தல்காரனின் குரல்பதிவுதான். தன் கைப்பேசியில், அழைப்புகளைத் தானாகவே ஒலிப்பதிவு செய்யும் வசதியைச்செய்திருந்தார் அவர். அவரது தொழிலுக்கு அது அவசியமானதாக இருந்தது. காவல்துறையின் தீவிர விசாரணையில் ஒருவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டான். அதே ஊரைச்சேர்ந்தவன்தான்.
Add Comment