அக்ஷய் வெங்கடேஷ்
அக்ஷய் வெங்கடேஷ், கணிதத்துறையில் சிறந்து விளங்குவோர்க்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஃபீல்ட்ஸ் பதக்கத்தை (Fields Medal) பெற்ற இரண்டாவது ஆஸ்திரேலியர். இரண்டாம் தலைமுறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தப் பரிசைப் பெற்ற ஒரே தமிழரும் அவர்தான். கணிதத்தில் அவருடைய தொலைநோக்குக் கோட்பாடுகளுக்காகவும் சிறந்த பங்களிப்புக்காகவும் 2018ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த கணித மாநாட்டில் கணிதத் துறையின் நோபல் பரிசு எனப்படும் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் வசித்துவரும் அக்ஷய் உயர் படிப்புக்கான கல்விக்கழகத்தில் (Institute for Advanced Study – IAS) கணிதவியல் துறையின் பேராசிரியராக 2018ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பல மேதைகளும் அறிஞர்களும் பணியாற்றிய இங்கு அக்ஷய்யும் பணியாற்றுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஏனெனில் அக்ஷய் சிறுவயதிலேயே மேதையாக அடையாளம் காணப்பட்டவர்.
1981ஆம் ஆண்டு டெல்லியில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். அக்ஷய் இரண்டு வயதாக இருக்கும்போதே அவருடைய குடும்பம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரத்துக்கு இடம்பெயர்ந்தது. அக்ஷய்யின் தந்தை ரவி வெங்கடேஷ் மென்பொருள் பொறியாளர். தாயார் ஸ்வேதா வெங்கடேஷ், கணினி அறிவியல் துறையின் பேராசிரியர்.










Add Comment