ஆலிவ் இருக்கும்வரை…
நூலகத்தின் இன்ஃபர்மேட்டிக்ஸ் பிரிவு வழக்கமான அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்த நிசப்தத்தைப் பிளப்பது போல விசைப்பலகைகளின் தட்டச்சு சத்தங்கள் மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தன. மேஜை ஒன்றில் இளைஞன் ஒருவன் மும்முரமாக எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்தான். அவனது மேஜையில் அரபு மொழிக் கவிதை நூல்களும், சர்வதேசச் சட்டப் புத்தகங்களும் சிதறிக் கிடந்தன. அவன் பெயர் ஜியாத்.
அவன் தட்டச்சு செய்துகொண்டிருந்தது கவிதை என்பதை எதேச்சையாகக் கவனித்து, மெல்லப் பேச்சு கொடுத்தேன். பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவாசி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான். அதைக் கேட்டதும் அனிச்சையாக ‘அங்கு இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?’ என்றேன்.
‘அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கு) ஊடகங்கள் உங்களுக்குப் போரையும் சாவையும் மட்டும்தான் காட்டுகின்றன மேடம். ஆனால் அந்த இடிபாடுகளுக்கு நடுவிலும் நாங்கள் எங்களது வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை யாருமே பார்ப்பதில்லை’ என்றான்.










Add Comment