அர்ஜுன் அப்பாதுரை
1949ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் அர்ஜுன் அப்பாதுரை. சுதந்தரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் சமூக அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் வளர்ந்ததால் தேசியம், பன்முகத்தன்மை குறித்த தெளிவான பார்வை இவரிடம் இயல்பிலேயே இருந்தது.
மும்பையில் புகழ்பெற்ற புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் இடைநிலை கலைப் பட்டத்தைப் பெற்றார். மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
சிகாகோ பல்கலைக்கழகத்திலேயே ஆய்வுப் படிப்பைத் தொடர்ந்தார். 1976ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். கிளிஃபோர்ட் கீர்ட்ஸ், மார்ஷல் சாஹ்லின்ஸ் போன்ற துறைசார் அறிஞர்களின் வழிகாட்டுதலில் பயின்றதால் அவருடைய ஆய்வுகள் ஆழமான தத்துவப் பின்னணியைக் கொண்டவையாக இருக்கின்றன.










Add Comment