கடந்த செவ்வாய்க்கிழமை, ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது கடந்த ஒரு மாதத்தில் ஐஐடி கான்பூரில் பதிவான இரண்டாவது தற்கொலை. இதையடுத்து, ஐஐடி மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஸ்வரூப். புவி அறிவியலில் பிஹெச்டி பயின்று வந்தார். ஐஐடி குடியிருப்பில் மனைவியுடனும் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடனும் தங்கியிருந்தார். அவரது திடீர் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கெனவே மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
இது குறித்துக் குரல் எழுப்பியுள்ளார் முன்னாள் ஐஐடி மாணவர்களுக்கான உலகளாவிய உதவிக்குழுவை நிறுவிய தீரஜ். இக்குழு சில தரவுகளை முன்வைத்துள்ளது. அவற்றின்படி, ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும், ஐஐடி வளாகங்களில் குறைந்தது அறுபத்தைந்து தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் சுமார் முப்பது நிகழ்வுகள், கடந்த இரண்டாண்டுகளில் பதிவாகியுள்ளது கவலையளிக்கிறது. மாணவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.















Add Comment