மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மிகப் பரபரப்பான வர்த்தக நகரம். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. அதன் ஒருபகுதியாக, மத்தியப் பிரதேச மாநில அரசு தலைமையில் இந்தூர் மாவட்ட நிர்வாகத்தால் ‘பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தூர்'(Begger free Indore) திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கீழ், பிச்சை எடுப்பவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது சொந்தமாக மூன்று வீடுகள், மூன்று ஆட்டோக்கள் மற்றும் ஒரு மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார் வைத்திருக்கும் கோடீஸ்வரப் பிச்சைக்காரர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
இந்தூரைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதான மங்கிலால் என்பவர்தான் அந்த துரதிர்ஷ்டசாலி. இவர் இந்தூரின் பரபரப்பான சராஃபா பஜாரில் பல ஆண்டுகளாக அனைவருக்கும் பரிச்சயமான முகம்.
இந்தூரின் அடையாளங்களில் முதன்மையானது சராஃபா பஜார். சிறு முதலீட்டாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்கள் நகையாக அல்லாமல் தூய உலோகமாக வாங்கி விற்கப்படும் புல்லியன் சந்தை. ஆனால் இரவு எட்டு மணிக்குப் பிறகு சந்தையின் காட்சியே வேறு.















Add Comment