கடல்வாழ் மனிதர்கள்
பழங்குடிகள் குறித்த புகைப்படத் தொகுப்பைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு புகைப்படத்தில் இருந்த சிறுவன் ஆக்சிஜன் சிலிண்டரோ கண்ணாடியோ எதுவுமின்றி ஆழ்கடலில் மிக இயல்பாக நடந்து கொண்டிருந்தான். மீன்களைப் போலவே தண்ணீருக்குள் அவனுடைய கண்கள் அகல விரிந்திருந்தன.
எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் நான் அந்தப் படத்தை ஆச்சரியமாகப் பார்ப்பதைக் கவனித்தார். அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
‘என் பெயர் ரெனால்டோ. ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்காரன்’ என்று அறிமுகம் செய்துகொண்டார். ‘நான் ஃபிலிப்பைன்ஸின் மிண்டனாவோ (Mindanao) தீவிலிருந்து வருகிறேன். அதனால்தான் அந்தப் படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. புகைப்படத்தில் இருப்பது ‘பஜாவ்’ (Badjao) இனச் சிறுவன். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ என்று பேச்சைத் தொடங்கினார்.










Add Comment