15 – கட்டவிழ்ந்த சமூகம்
மன்னராட்சிக்குப் பிறகு, எழுபதாண்டுகள் கடந்திருந்தன. இனி சோவியத்தின் கட்டமைப்பில் திருத்தங்கள் செய்து பயனில்லை. முழுவதுமாக மாற்றியெழுத வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார் கர்பச்சோவ். அத்தனை எளிதாகச் செய்துவிட முடியுமா…?
எப்படி இருந்தது சோவியத்தின் கட்டமைப்பு?
கம்யூனிசக் கட்சியும், சோவியத்தின் ஆட்சியும் ஒன்றையொன்று தழுவியிருந்தன. இரண்டிற்குமிடையே திட்டமான வரையறை இருக்கவில்லை. இது பெரிதும் பயனளிக்கவே, இப்படித்தான் இருக்க வேண்டும்போல என்று எல்லா அதிபர்களும் விட்டுவிட்டார்கள். மன்னர் என்று யாருமில்லை. கம்யூனிசக் கட்சி இருந்தது, தேர்தல் நடந்தது. இதனால் நடப்பது கம்யூனிச ஆட்சி என மக்கள் நம்பினார்கள். வெளியுலகமும் நம்பியது. ஆனால் நடந்தவை சாங்கியத் தேர்தல்கள். எதிர்த்து வேறு கட்சிகளோ, தலைவர்களோ உருவாகவே இல்லை என்பதை இங்கு கவனிக்கத் தவறிவிட வேண்டாம்.
Add Comment