தலைமைப் பண்புகள்
ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது தலைமைப் பதவிகளிலிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கேற்ற விகிதாசாரத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம். நாம் பார்த்த பெண் தலைமைச் செயலதிகாரிகளில் சிலருக்குப் பெண்ணாக இருந்ததனால் மேலதிகச் சிரமங்களை அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களையும் பார்த்தோம். காலம் மாறுகிறது. எல்லாத் துறைகளிலும் பெண்களும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனாலும் எண்ணிக்கையில் ஆண்களுக்குச் சமமாக வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது.
நல்ல தொடர் ! இன்னும் தொடரலாமே !உதாரணத்திற்கு தலைமை வகித்தவரின் உதவியாளர் கதை! மத்தாய்(நேரு) போன்ற பலர் – கலைஞர் உதவியாளர் பற்றி கூட !
விஸ்வநாதன்