தனி நபர்களுக்கு மட்டும் அல்ல, நாடுகளுக்கும் மரியாதை உண்டு. மனிதர்களைப் போலவே மான அவமானங்கள் உண்டு. நாடு என்பது வெறும் பூமி அல்ல. வாழும் மக்களின் உணர்வு அது.
சிறுவர்களுக்கு இடையில் கூட நட்பு என்பது சமநிலையில் இருக்க வேண்டுமெனச் சொல்கிறோம். நாட்டுத் தலைவர்களும் சரிசமமாகவே மதிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனை இந்திரா காந்தி சந்திக்க வந்தபோது அப்படியே நடத்தப்பட்டார்.
‘இந்தியா தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்பட விரும்புகிறது. நாங்கள் எந்த அரசியல் குழுவிலும் இணைய விரும்பவில்லை. ஆனால் எல்லாத் திசைகளிலும் நட்புக் கரங்களை நீட்டுகிறோம். எந்த இரு நாடுகளின் பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் உலக நலனுக்காக ஒருமித்த கொள்கைகளைக் கண்டுபிடிக்கலாம். அதில் ஒன்றாகச் செயல்படலாம். அதைத்தான் இந்தியா விரும்புகிறது’ என்றார் இந்திரா. அந்தப் பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியே இருந்தது. ஆனால் தன்னம்பிக்கை குறையவில்லை இந்திராவிடம்.















Add Comment