Home » உக்ரைன்: புதிய பிரதமரும் போர்க்கால வர்த்தகமும்
உலகம்

உக்ரைன்: புதிய பிரதமரும் போர்க்கால வர்த்தகமும்

யூலியா ஸ்விரிடியங்கோ

உக்ரைனுக்குப் புதிய பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் கிடைக்கப் போகின்றன. அதேபோல புதிய பிரதமரும் கிடைத்து விட்டார். இரண்டும் அமெரிக்காவின் தயவில் நடந்தன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

துணைப் பிரதமராக இருந்த யூலியா ஸ்விரிடியங்கோ, புதிய பிரதமராகப் பதவியேற்கப் போகிறார். உக்ரைனின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறைகளைக் கவனித்து வந்தவர். அண்மையில் அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்தவர்.

முந்தைய பிரதமர் டென்னிஸ் ஷமிஹால், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். உக்ரைன் போரில் வெல்வதற்கும் அதற்கான நிதி ஆதாரத்தை ஈடுகட்டவும் இந்த ஏற்பாடு என்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி.

முறைப்படி தேர்தல் நடத்தி, புதிதாகத் தேர்வாகும் உக்ரைன் அதிபருடன்தான் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் எனக் கூறி வருகிறது ரஷ்யா. இப்போது அதிபரைத் தவிர, பெரும்பாலான அமைச்சரவைக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது ரஷ்யாவையும் திருப்திப்படுத்தும், அமெரிக்காவையும் குளிர வைக்கும் நடவடிக்கை என்பது உக்ரைன் தரப்பு உத்தியாக இருக்கலாம். அமெரிக்கா ஐம்பது நாள் கெடு அறிவித்த பின், மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்று ரஷ்யா தெரிவித்திருப்பதும் நல்ல செய்திதான். எங்கோ சமரசம் தொடங்கியிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!