2025ஆம் ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட பத்து நபர்களில் ஒரே இந்தியராக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். இந்திய அளவில் கூகிளில் தேடப்பட்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷியின் பெரும் உழைப்பு இந்தப் புகழை அவருக்கு அளித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குறும்பட்டியலில் தேர்வானபோது வைபவ்வுக்கு வயது பதிமூன்று. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியை ஒரு கோடியே பத்து லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தபோது, குறைந்த வயதில் ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்டவர் எனத் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.
2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் சூர்யவன்ஷியை நாக்பூரில் ஒரு பரிசோதனைப் போட்டியில் கலந்து கொள்ள வைத்தது. அப்போட்டியில் சிறப்பாக ஆடினார். அதைப் பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸும் டெல்லி கேபிடல்ஸும் சூர்யவன்ஷியை ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப் போட்டிப் போட்டன. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூர்யவன்ஷியைத் தனதாக்கியது.















Add Comment