தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிப்படை ஒரு கதாநாயகி, ஒரு திருமணம், ஒரு தாலி. என்னதான் காலம் மாறிவிட்டதாகச் சொன்னாலும் அனைத்துத் தொடர்களின் கதாநாயகிகளும் இன்றும் மஞ்சள் மாறாத குண்டு தாலியுடன் தான் அனைத்துக் காட்சிகளிலும் வந்து போகிறார்கள். தாலிக்கு வேலை இருந்தால் அது சேலைக்கு மேலே தெரிந்ததெல்லாம் அக்காலம். கதாநாயகி இருந்தாலும் இல்லாவிட்டாலும் காட்சியில் தாலி தெரிந்தாக வேண்டியது இன்றைய நிலைமை. நவீன பெண்கள் வேண்டுமானால் கழட்டி பீரோவில் வைக்கலாம். நவீன தொலைக்காட்சித் தொடர்கள் தாலிக்கு மட்டுமே கழுத்து என்னும் கொள்கையைத்தான் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற நயந்தாரா திருமணம் உலகறிந்தது. திருமணத்துக்குப் பின்பு அவர் கணவருடன் தேன்நிலவு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின. அனைத்திலும் நயந்தாராவைக் காட்டிலும் அவர் அணிந்திருந்த தாலியே பிரதானமாக வெளிப்பட்டதை நினைவுகூரலாம். இது இனி வரும் தலைமுறையினரிடம் மீண்டும் தாலியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் பணியைச் செய்யலாம்!
நிற்க. தமிழர் திருமணத்தில் தாலி எப்போது நுழைந்தது?
Add Comment