சித்தாந்தம் என்றால் என்ன?
உலகம் என்று குறிப்பிடும் போது உலகத்தில் உல்ல சடப்பொருள்கள், உயிர்கள், மனிதர்கள் என்ற அனைத்தையும் குறிப்பதுதான் அது. ஆனால் பொதுவாக எந்த ஒன்றையும் உருவகமாகக் குறிக்கும் போது அந்த குறிப் பொருளில் அமைந்துள்ள உயர்ந்த ஒன்றைப் பற்றியே பொதுவாகச் சுட்டுகிறோம். சிறிது குழம்புகிறது இல்லையா? சிறிது விளக்கலாம். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது நிகண்டு சொல்லும் விளக்கம். உலகத்தில் வாழும் சகல சடப் பொருட்கள், விலங்குகள், மற்ற உயிரினங்கள், மனித இனம் என்ற அத்தனையிலும் சலித்தெடுத்த, மனிதர்களிலும் உயர்ந்து, சிறந்த எண்ணங்களைக் கொண்டு வாழ்கின்ற மனிதர்களையே உலகம் என்ற சொல் குறிப்பிடுகிறது என்கிறது நிகண்டு. ஆக, உலகம் என்ற சாதாரணமாகச் சொல்லக் கூடிய சிறிய ஒரு சொல் கூட, அந்தப் பொருண்மையில் இருக்கின்ற மிக உயர்ந்த ஒரு பொருளையே உருவகமாகச் சுட்டுகிறது.
Add Comment