Home » ஒக்கப்பில்லேரி
இலக்கியம்

ஒக்கப்பில்லேரி

எழுத்தே தெரிந்திராத நான்கு வயதில் நான் பார்த்த முதல் புத்தகத்தின் பெயர்தான் மேலே இருப்பது. இதை எழுத்துக்கூட்டிப் படிக்கவே இன்னும் சில ஆண்டுகள் ஆகவேண்டியிருந்தது. அப்போதே அதற்கு நாற்பது ஐம்பது வயதாகியிருக்கும்படி அப்பாவின் ஒரே ஆஸ்தியாக இருந்த பழைய கனமான இரும்பு டிரங்குப் பெட்டிக்குள் பழுப்பேறிக் கிடந்தது. அந்தப் புத்தகத்தின் முழுப்பெயர்: நாலு பாஷை ஒக்கப்பில்லேரி.

அதைப் பார்த்துப் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் ஆனபின்பு, ஆங்கில பாடப்புத்தகத்தை வாய்விட்டு வாசிக்கச் சொல்லி, உச்சரிக்கத் தடுமாறவைக்கும் வார்த்தையை மென்று விழுங்கி ஒப்பேற்றிக் கொண்டிருப்பதற்குக் காதுகொடுத்தபடியே குத்துக்காலிட்டு ரேஷன் அரிசியில் கல் பொறுக்கொண்டும் பக்கத்தில் இந்து பேப்பரை விரித்து வைத்துப் படித்துக்கொண்டும் இருந்த அப்பா, நான் எதோ ஒரு புரியாத வார்த்தைக்கு சந்தேகம் கேட்கப்போக – பல வார்த்தைகள் புரியாதவைதாம். அது கேள்வியே பட்டிராததாக இருந்திருக்கவேண்டும் – ‘அந்த செண்டன்ஸை முழுசா படி’ என்றார். படித்ததும் எனக்குத் தெரிந்த இன்னொரு வார்த்தையைச் சொல்லி அதுதான் இது என்றார். அதிகப்பிரசங்கியாய், அது இருக்கும்போது இது எதுக்கு என்று அடுத்த கேள்வியைக் கேட்டுவிட்டதற்காக, கையை நீட்டி சொடேரென கொட்டிவிட்டு,  ‘வக்காப்லரி இல்லாம இங்கிலீஷ்ல குப்பை கொட்டமுடியாது’ என்றார். மண்டையில் பட்ட குட்டு சுரீரென்று உறைத்தது; கூடவே டிரங்குப் பெட்டிக்குள் இருக்கும் புத்தகத்தின் மேல் இருக்கிற வினோத வார்த்தையாகத் தோன்றிய ‘ஒக்கப்பில்லேரி’ அப்பா சொன்ன இந்த ‘வக்காப்லரி’யாகத்தான் இருக்கவேண்டும் என்று பிடிபட்டது. நவீன இலக்கியத்தில் தலைகுப்புற குதித்த பிறகுதான் தெரியவந்தது, மேலோட்டமான பார்வைக்கு ஒன்று போலவே படுகிற சொற்கள் ஒன்றல்ல; இடத்திற்கேற்பப் பயன்படுத்தப்படவேண்டியவை என்பது, அரிசி பொறுக்கியபடி அப்பா சொன்னது அர்த்தபூர்வமாகப் புரிந்தது. அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தது: ‘அர்த்தம் புரிந்து படி. அதுதான் மனதில் நிற்கும். கடனெழவே என்று கடம் அடித்து மனப்பாடம் செய்வது ஒட்டாது. அதனால் ஒரு பயனும் இல்லை.’ எழுத்தாளனின் மொழிவளமும் மொழி மீதான ஆளுகையும் சிங்கப்பூர் மைனர் போல காக்கா கண்ணாடியாய் மினுக்கிக்கொண்டு திரிவதில் இல்லை; இடத்திற்கேற்ப சொற்களைத் துல்லியமாகப் பயன்படுத்துவதில் இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!