கொந்தளிப்பு நல்லதல்ல. மனத்திற்கும் சரி, விமானத்திற்கும் சரி… வெளிப்படும் நேரம் விமானம் மட்டுமல்ல, வாழ்க்கையும் சரிந்துவிடும்.
சீராகப் பறந்து கொண்டிருந்தது வாக்னர் படையின் ஜெட் விமானம் திடீரென்று மேலும், கீழும் உயரத்தை மாற்றுகிறது. பின்பு செங்குத்தாகப் பூமிக்குப் பாய்ந்து, தற்கொலை செய்து கொள்கிறது. மாஸ்கோவில் தொடங்கியது இந்த விமானத்தின் பயணம். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், 1961-ஆம் ஆண்டு தொடங்கியது ப்ரிகோஷினின் வாழ்க்கைப் பயணம். குஷெங்கினோ எனும் தெவேர் ஆற்றுப் பகுதியில், இரண்டும் நிரந்தர முற்றுப்பெற்றது.
எவ்கேனி வீக்தரவிச் ப்ரிகோஷின் – புடினின் சமையற்காரர், ரஷ்யாவின் ஜார்ஜ் சோரோஸ் எனப்படுபவர். வாக்னர் எனப்படும் ரஷ்யாவின் தனி இராணுவப் படையின் தலைவர்.
Add Comment