17. பண்பாட்டுத் தலைநகரம்
பிரிட்டிஷ் இந்தியாவை நிர்வாக அடிப்படையில் மூன்று முதன்மை மாகாணங்களாகப் பிரித்திருந்தார்கள்: கல்கத்தாவைத் (இன்றைய ‘கொல்கத்தா’) தலைமையகமாகக் கொண்ட வங்காள மாகாணம், பம்பாயைத் தலைமையகமாகக் கொண்ட பம்பாய் மாகாணம், மெட்ராஸைத் (இன்றைய ‘சென்னை’) தலைமையகமாகக் கொண்ட மெட்ராஸ் மாகாணம்.
இதில் பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகப் புணே நகரம் (அன்றைய ‘பூனா’) இருந்தது. இப்போதும் பம்பாயைத் தலைநகரமாகக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அது இடம்பெற்றுள்ளது.
ஆனால், உண்மையான பூனாக்காரர்கள் தாங்கள் பம்பாய்க்குக் கீழே இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ‘பூனா இந்தியாவின் முதன்மையான பெருநகரங்களில் ஒன்று. பம்பாய் அதன் புறநகர்ப் பகுதிமட்டும்தான்’ என்று கோகலேவின் குருநாதர் ரானடே சொல்வதுண்டு.










Add Comment