25. கற்பித்தல் நம் கடமை
சார்வஜனிக் சபாவின் காலாண்டிதழ் என்பது அடிப்படையில் ஒரு செய்தி மடல்தான் (Newsletter). அதாவது, அந்த அமைப்பின் நடவடிக்கைகள், கூட்டங்கள், அறிக்கைகள், கடிதங்கள், நிகழ்ச்சிகள், மற்ற நடவடிக்கைகளைப்பற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதுதான் அந்த இதழின் முதன்மையான நோக்கம்.
நீங்கள் ஏதாவது ஒரு பொது நல அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இதுபோன்ற செய்தி மடல்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள், மேலோட்டமாக ஒரு முறை புரட்டிவிட்டுத் தூக்கிப் போட்டிருப்பீர்கள். ஏனெனில், வழக்கமான மற்ற இதழ்களைப்போல் சுவையான, கனமான விஷயங்கள் இவற்றில் இடம்பெறாது. அவை வெறும் வரலாற்றுப் பதிவேடுகளாகத்தான் இருக்கும். அதுவும் மிக மெதுவாக நகர்கிற வரலாறு.
ஆனால், ரானடேவின் பொறுப்பில் வெளிவருகிற ஓர் இதழ் வெறும் செய்தி மடலாகவே இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் சமுதாயத்துக்குப் பயன்படுகிறவிதமாகத்தான் இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். சார்வஜனிக் சபாவின் காலாண்டிதழுக்கு அவர் அப்படியொரு பயனுள்ள வடிவத்தை உருவாக்கியிருந்தார்.










Add Comment