சில வாரங்களுக்கு முன் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்குப் பிரபல நடிகை ஒருவர் வந்து வழிபட்டது செய்தியாகியிருக்கிறது. இங்கு நடிகர்கள், பிரபலங்கள் வருவது வாடிக்கை. நெய் விளக்கேற்றி வழிபட்டால் சட்டச் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் தீரும் என்று நம்பிக்கை.
இக்கோவிலின் தொன்மமும் அப்படியே சொல்கிறது. சத் எது, அசத் எது என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் விவாதம் ஏற்பட்டது. சிவபெருமான் தோன்றி வழக்கைத் தீர்த்து வைத்ததால் வழக்கறுத்தீஸ்வரர்.
கல்வியும் விவாதமும் காஞ்சியில் புதிதல்ல.
‘அளவைவாதிகளும் சமயவாதிகளும் உளமகிழ்ந்து உரைக்கும் கச்சி மாநகர்’ என்பது மணிமேகலை வரி. அளவை என்றால். லாஜிக். மணிமேகலையின் அறவன அடிகள் காஞ்சியில் படித்தவர். திக்நாகர் அவர் ஆசிரியர். நியாய சூத்திரத்தை எழுதிய வாத்சாயனர், காஞ்சியில் இருந்த புத்த பிக்குகளிடம் வாதிட்டதாக அதிலே குறிப்பிடுகிறார்.
இன்றும் கல்வி என்றால் நினைவில் வரும் பழைய ஊர்கள் நாளந்தாவும், காஞ்சியுமே.















Add Comment