Home » உரி – 189
உரி • நாள்தோறும்

உரி – 189

189. தீராப் புனல்

மூன்றாம் யாமத்தின் இரண்டாவது நாழிகை முடிவடையவிருந்த நேரம். இரவுப் பூச்சிகளின் ஒலியும் நின்றுவிட்டிருந்தது. அர்த்த மண்டபத்துக்கும் கருவறைக்கும் இடையிலிருந்த படிக்கல்லின் இரு புறங்களிலும் சுவரோரம் நிறுத்தப்பட்டிருந்த பந்தங்களின் ஒளியில் கருவூர்ச் சித்தரின் முகம் சிவந்து பொலிந்துகொண்டிருந்தது. சர்ப்பத்தின் மீது பதுமமிட்டு அமர்ந்திருந்தவர் மெல்லக் கண் திறந்து சார்வாகனைப் பார்த்தார். புன்னகை செய்தார்.

அலைபாயும் சிந்தையை இழுத்துக் கட்டி ஒற்றை எண்ணத்தில் நிலை நிறுத்தி அலசிப் பார்ப்பது உனக்குப் பிடித்திருக்கிறதல்லவா?

என்று கேட்டார்.

விருப்பமில்லாத எது ஒன்றையும் நான் செய்வதில்லை ஐயனே. தவிர, என் விருப்பமென்பது நான் ஆராய்ந்து தெளிந்து எனக்கென ஏற்பதே தவிர, தன்னிச்சையாக எழுவதையெல்லாம் நான் விருப்பமெனக் கொள்வதில்லை. மனத்துக்கென்ன. அது ஆயிரம் நினைக்கும். பல்லாயிரம் எதிர்பார்க்கும். எல்லாமே விருப்பமென்றால் விரும்பும் நிலைக்கொரு மதிப்பின்றிப் போய்விடும் அல்லவா?

அப்படியா நினைக்கிறாய்? விசித்திரமாக உள்ளதப்பா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!