24. ஒப்படைத்தல்
கோகலே ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கமாட்டார். வகுப்புகளுக்கு நடுவிலான இடைவெளிகள், மதிய உணவு நேரத்தில்கூட அவர் சும்மா உட்கார்ந்திருக்கமாட்டார். சில நிமிடங்கள் ஓய்வு கிடைத்தாலும் ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதுதான் அவருடைய பழக்கம். தேவையில்லாத வம்புப் பேச்சுகள் கிடையாது, மற்றவர்களைப்பற்றிக் குற்றம் சொல்வதில்லை, நாற்காலியில் உட்கார்ந்தபடி குட்டித் தூக்கம் போடுவதில்லை. எந்நேரமும் வேலை, வேலை, வேலைதான்.
சில நேரங்களில் கோகலேவுக்கு உருப்படியாக எந்த வேலையும் அகப்படாது. அப்போது சட்டென்று நூலகத்துக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கிவிடுவார்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு, அதாவது, கோகலே பெரிய அரசியல் தலைவராக வளர்ந்தபின்னர் யாரோ அவரிடம் கேட்டார்கள், ‘ஐயா, நாங்கள் பொதுவாழ்க்கையைத் தொடங்குவது எப்படி?’










இன்று புதிதாய் ஒரு தமிழ்ச்சொல் கற்றுக்கொண்டேன். மின்னேணி-LIFT என்னும் ஆங்க்கிலச் சொல்லுக்கு மாற்று!