45. சாதனைகள், சவால்கள், சான்றுகள்
சில நேரங்களில் நண்பர்களாக நினைத்தவர்களெல்லாம் நம்மைக் கைவிடும்போது, எதிரியாக நினைத்த ஒருவர் நமக்குக் கை கொடுக்கக்கூடும்.
1897ல் கோகலேவுக்கு அப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டது. உண்மைக் குற்றச்சாட்டுகளோடு பல கற்பனைகளையும் கலந்து கடிதங்களை எழுதி அவரைப் பெரிய வம்பில் மாட்டிவிட்டவர்களெல்லாம் சிக்கல் பெரிதானதும் ஒதுங்கிக்கொண்டார்கள், அவருக்கு ஆதரவாக நிற்க மறுத்தார்கள். ஆனால், அரசியல் களத்தில் கோகலேவுக்கு எதிரியாக நின்ற திலகர் அவரைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கினார்.
கோகலேவும் திலகரும் கொள்கையளவில் எதிரெதிர் முனைகளாக இருப்பினும், அவர்களுக்கிடையிலான நட்பு தொடர்ந்துகொண்டுதானிருந்தது. இருவரும் மற்றவருடைய பங்களிப்பை மறுக்கவோ குறைத்து மதிப்பிடவோ இல்லை.










Add Comment