Home » ஆசான் – 47
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 47

47. தடிக்காத தோல்

கோகலே தன்னுடைய தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கத் தீர்மானித்தபோது, சுற்றியிருந்த பல நண்பர்கள், நலம் விரும்பிகள் அவரைத் தடுக்க முயன்றார்கள், ‘இதன்மூலம் உங்களுடைய நற்பெயர் கெட்டுப்போகும். இதைப்பற்றிப் பேசாமல் சும்மா இருந்துவிடுங்கள்’ என்று அறிவுரை சொன்னார்கள்.

ஆனால், கோகலே அவர்களுடைய வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, ‘நான் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும். நடந்ததை ஒப்புக்கொள்வதால் என்னுடைய நற்பெயர் கெட்டுப்போய்விடும் என்றால் பரவாயில்லை. அதற்காக நான் உண்மையை மறைத்துப் பொய் பேசமுடியாது.’

கோகலே இவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டபோதும், உலகம் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல் உண்மையின் வழியில் நடந்ததற்காக அவருக்குக் கிடைத்த பரிசுகள், ஏகப்பட்ட திட்டுகளும் பழிச்சொற்களும்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!