சாமானியர்களின் கதை
சிகாகோவில் வசிக்கும் முப்பத்து நான்கு வயது சாரா எமிலி, இரண்டு குழந்தைகளின் தாய். கடினமாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் ஓர் உணவகப் பணியாளர். 2011இல் அவளுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் ‘உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்’ என்றார்.
ஆனால் சாராவுக்குப் பணியில் மருத்துவக் காப்பீடு கிடையாது. தனியாகக் காப்பீடு வாங்க முயன்றால் ‘முந்தைய நோய்’ என்று நிராகரித்துவிடுவார்கள். அமெரிக்காவில் மருத்துவச் செலவுகளை சாராவால் சமாளிக்க முடியாது. ‘நான் இறந்துவிட்டால் என் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? அவர்களுக்கு என்ன ஆகும்?’ என்று அவள் கவலைப்பட்டாள். 2012 தேர்தலுக்கு முன்பு இதுதான் கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் நிலைமை.
2012 ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா ஒரு சிக்கலான பாதையில் நின்றிருந்தது. ஒபாமா அதிபராக இருந்த முந்தைய நான்கு ஆண்டுகளில் நாடு கடுமையான சவால்களை எதிர்கொண்டது. 2008இல் ஏற்பட்ட பெரும் மந்தநிலையில் இருந்து மெதுவாக மீண்டு வந்துகொண்டிருந்தது. இந்தச் சூழலில் குடியரசுக் கட்சி ஒரு வலுவான வேட்பாளரைக் கண்டுபிடித்தது. மிட் ராம்னி என்ற பெயர் அமெரிக்காவில் உச்சரிக்கப்பட ஆரம்பித்தது.














Add Comment