Home » பேசு கண்ணா பேசு!
உலகம்

பேசு கண்ணா பேசு!

ஆசிம் முனீர்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் சையது ஆசிம் முனீர், தனது பொறுப்பற்ற தடாலடிப் பேச்சால் இந்தியாவைத் தொடர்ந்து சீண்டி வருகிறார். அன்னாரின் வாய்ச்சவடால் அண்மையில் இன்னும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் அடுத்த சர்வாதிகாரி என்று கட்டியம் கூறப்படும் முனீரின் சவடால்களுக்கும் மிரட்டல்களுக்கும் பின்னால் இருக்கும் காரணிகள் என்ன?

2022ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக இருக்கும் ஆசிம் முனீர், 1968ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் பிறந்தவர். தளபதி பொறுப்பிற்கு வருவதற்கு முன் மிக முக்கியப் பதவிகளான ராணுவ உளவுத்துறை, ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றில் இருந்துள்ளார். அவர் பயிற்சி பெற்ற ராணுவப் பள்ளியின் சிறந்த மாணவராகத் தேர்ந்து, 1986 முதல் தன் பணியைத் தொடங்கினார். ஜப்பானிலும் மலேசியாவிலும் மேற்படிப்பு படித்துள்ளார். சவுதி அரேபியாவில் சிறிது காலம் military attaché எனும் ராணுவத் தூதர் பொறுப்பில் இருந்துள்ளார். இக்காலக்கட்டத்தில்தான் புனிதக் குரானை முழுதும் மனனம் செய்து ‘ஹாஃபீஸ்’ பட்டத்தைப் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் பூன்யான் உல் மார்சூஸ்’ என்ற எதிர் நடவடிக்கை எடுத்தார்.
‘பூன்யான்-உல்-மர்சூஸ்’ என்ற சொற்றொடர் நேரடியாக குர்ஆனில் இருந்து எடுக்கப்பட்டது. ‘உறுதியான கட்டமைப்பு’ என்பது அதன் பொருள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!