“என்னடா? எதைச் சாப்பிட்டாலும் கான்சர் வரும் என்கிறீங்க?” என்ற பட்டியலில் இதோ இன்னுமொரு பண்டம் சேரப் போகிறது. ‘அஸ்பாடேம்’ (Aspartame) எனப்படும் செயற்கைச் சர்க்கரை. அஸ்பாடேம் புற்று நோயைத் தோற்றுவிக்கக் கூடியது என்பதாக வரும் ஜூலை மாதம் பதினான்காம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க இருக்கிறது உலக சுகாதார ஸ்தாபனம். புற்று நோயாக்கிகள் ‘காசினோஜன்கள்’ எனப்படுகின்றன.
உலகின் எத்தனையோ காப்பரேட் உணவுப் பான நிறுவனங்களின் பிழைப்பில் கை வைக்கப் போகும் இந்த அறிக்கைக்கு இப்போதே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பி விட்டன.
Add Comment