இங்கிலாந்து இதழ்களும்கூடக் கோகலேவின் உரையைப் பாராட்டின. அந்தச் செய்தியை 'அரச ஆணையத்தை அதிரவைத்த உரை' என்ற தலைப்புடன் வெளியிட்டிருந்தது ஓர் இதழ்.
Author - என். சொக்கன்
![]()
காங்கிரீவ் அம்மையாரின் அக்கறையான கவனிப்பால் கோகலே நெஞ்சு வலியிலிருந்து விடுபட்டார், வழக்கமான பணிகளுக்குத் திரும்பினார். ஆனால் அவர் முழுமையாகக் குணமாகியிருக்கவில்லை.
கோகலே நெஞ்சு வலியைப் பொறுத்துக்கொண்டு லண்டனுக்குப் பயணம் செய்தார், தாதாபாயைச் சந்தித்தார். ஆனால், அவரிடம் ஓரளவுக்குமேல் நெருங்குவதற்குக் கோகலேவுக்கு மனம் வரவில்லை.
ரானடேவுடன் பேசுவதும் கற்றுக்கொள்வதும் கோகலேவுக்கு மிகப்பெரிய வலிமையுணர்வை, மன நிறைவைக் கொடுத்தன. எந்தத் தீர்மானமானாலும் ரானடேவின் அறிவுரைகளைக் கேட்காமல் கோகலே செயல்பட்டதில்லை.
வெல்பி ஆணையத்தின்முன் சான்றளிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறந்த பொருளாதார வல்லுனர்களை இங்கிலாந்துக்கு வரவழைக்கவேண்டும் என்று தாதாபாய் விரும்பினார்.
சார்வஜனிக் சபா என்பது ரானடேவின் பல சமூக, அரசியல் முன்னெடுப்புகளில் ஒன்று, அவ்வளவுதான். அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதால் அவருடைய பணிகள் நின்றுவிடப்போவதில்லை.
பரபரப்பான மைசூரு ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது யாதவகிரி. ஆனால், அதற்குள் இன்னோர் உலகத்துக்கு நுழைந்துவிட்டாற்போல் முற்றிலும் மாறுபட்ட, அமைதியான சூழல். மேலேறிக் கீழிறங்கும் அகன்ற தெருக்களில் ஆள் நடமாட்டமில்லை. பெரும்பாலும் தனித்தனி வீடுகள். அவற்றின் அமைப்பு...
புனே காங்கிரஸ் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்கிற குழுவின் செயலாளர்களாகத் திலகரும் கோகலேவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன்மூலம் இருதரப்புத் தொண்டர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கோகலேவின் தீர்மானத்தை ரானடே ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற தலைவர்களும் கோகலே இன்னும் சிறிது காலத்துக்காவது சார்வஜனிக் சபாவின் செயலாளராகத் தொடரவேண்டும் என்று விரும்பினார்கள்.
கோகலேவும் சாவித்ரிபாயும் சேர்ந்து வாழாவிட்டாலும், அவரும் ராதாபாயும் சாவித்ரிபாயை அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்கள், கடைசிவரை அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார்கள்.












