2025ஆம் ஆண்டின் தொடக்கம் வரை ‘நான் ஓர் எழுத்தாளர்’ என்ற நினைப்பு எனக்குத் துளியும் எட்டிப் பார்த்ததில்லை. இதோ ஆண்டின் இறுதியில் என்னுடைய முப்பத்து இரண்டு கட்டுரைகள் மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியாகியுள்ள விந்தை நிகழ்ந்துள்ளது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றியே இவ்வருடத் தொடக்கத்தில்...
Author - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி
![]()
இலங்கை, வங்கதேசம், நேபாளம், மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா? இந்நாடுகள் அனைத்திலும் ஜென் ஸீ தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது பல்கேரியாவும் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில்...
‘கைதிகள் தப்பியோட்டம்’ என்பது நாம் அவ்வப்போது கேள்விப்படும் செய்திதான். ஆனால் ‘கன்னியாஸ்திரிகள் தப்பியோட்டம்’ என்ற அண்மைச் செய்தியைக் கேள்விப்பட்டீர்களா? ஆஸ்திரியா நாட்டில் கன்னியாஸ்திரிகள் மூவர் தப்பியோடிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் எங்கிருந்து தப்பித்து எங்கு...
2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர் மரியா கொரினோ மச்சாடோ. இவர் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவர். சதி, வெறுப்பைத் தூண்டுதல், பயங்கரவாதம் போன்ற செயல்களுக்காக மரியா கொரினோ மச்சாடோ வெனிசுவேலா அரசின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். ஆம், மச்சாடோ ஓராண்டுக்கும் மேலாக வெனிசுவேலாவின் ஏதோ...
ஹன்னிபல் கடாஃபி, லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி முவாம்மார் கடாஃபியின் எட்டு வாரிசுகளில் ஒருவர். கடந்த பத்து ஆண்டுகளாக லெபனான் சிறையில் விசாரணை ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்தார். லெபனான் அரசால் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சரி, ஹன்னிபல் கடாஃபியின் இந்தச் சிறைவாசம் எதற்காக? இமாம் மூஸா...
அப்போது அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. திரைப்பட இயக்குநரான அவனது அம்மா, The Namesake என்ற படத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அதேநேரத்தில், புகழ் பெற்ற ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனமான Warner Bros., ஹாரி பாட்டர் படத்தின் நான்காவது பாகத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அவருக்கு...
‘நான் மண்டியிட்டு இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.’ மெலிசா சூறாவளி (Hurricane Melissa) தாக்கும் ஒரு நாள் முன்பு, ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் கையறுநிலையில் பேசியது இது. ‘ஒட்டுமொத்த ஜமைக்காவுமே உண்மையில் உடைந்து போய் உள்ளது.’ மெலிசா கரை கடந்த பின், அந்நாட்டின்...
‘ஜென் ஸீ மடகாஸ்கர்’ குழுவினர் தொடங்கிய போராட்டம், ஒரு மாதத்துக்குள் மடகாஸ்கர் நாட்டில் ஆட்சியையே மாற்றியிருப்பதை நாம் அறிவோம். தலைநகர் ஆன்டனனரீவோவில் இவ்வருடம் செப்டம்பர் 25 அன்று தொடங்கிய கிளர்ச்சி, அக்டோபர் 11 அன்று அதிபர் தலைமறைவான பின் முடிவுக்கு வந்தது. தன் உயிருக்கு அஞ்சி நாட்டை...
உலகெங்கும் ஜென் ஸீ தலைமுறையினர் முன்னெடுக்கும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் பல நாடுகளில் இந்தப் போராட்டங்களால் ஆட்சி மாற்றத்தை உலகம் பார்த்துள்ளது. ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரிலும் ஜென் ஸீ போராட்டத்தின் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 25 முதல்...
அவளுக்கு அப்போது ஐந்து வயது. திடீரென ஒருநாள் தொலைந்து போனாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் பெரும் பதற்றம் அடைந்தனர். வீட்டின் பின்புறம் கோழி வளர்ப்புக் கொட்டகை ஒன்று இருந்தது. அதிலிருந்த இருட்டறையில் தேட வேண்டுமென ஒருவருக்கும் தோன்றவில்லை. கோழிக் கொட்டகையின் இருட்டறையில்தான்...












