‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது...
Author - ரும்மான்
![]()
“நிலைமை கைமீறிப் போய்விட்டது. எல்லா சத்திர சிகிச்சைகளும் கால வரையறையின்றிப் பிற்போடப்படுகின்றன” தீயாய்ப் பரவுகிறது அந்தக் குறுஞ்செய்தி. பேராதனை போதனா மருத்துவமனையில் பணிப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களில் பவனி வருகிறது அறிக்கை. ஏற்கனவே, கொதிக்கும் எண்ணெய்த் தாழியிலிருந்த தேசம்...
வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த...
“உங்க வீட்ல கொஞ்சம் கூட எதிர்ப்பு வரலயா சார்?” புருவங்களை உயர்த்துகிறேன். பின்னே? ஒரு மனிதன் நான்கு பழைய சப்பாத்துக்களோடு வீடு திரும்பி மாலை முழுதும் அவற்றோடு மல்லுக் கட்டினால், எந்த மனைவிதான் சும்மா இருக்கப் போகிறார்? ஆமாம் யாரந்த மனிதர்? மஹிந்த சார்! ஒரே இரவில் புகழ் பெற்ற ஆசிரியர். சென்ற...
கொழும்பு சிங்களப் புத்தகக் காட்சி குறித்த நேரடி ரிப்போர்ட். தமிழ் வாசகர்களுக்குச் சில புதிய திறப்புகளைத் தருகிற கட்டுரை. “மாக்சிம் கார்க்கியின் ‘அம்மா’ (தாய் நாவலின் சிங்கள மொழியாக்கம்) இருக்கிறதாப்பா?” அந்தப் பிரம்மாண்டமான அரங்கினுள் இரண்டு பிள்ளைகளோடு நுழைந்த பெண்மணி...
கொழும்பில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ரும்மான் தருகிற இந்த ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் பொருந்தும். எனது மாணவர்களிடத்தில் யாராவது “உங்களுக்கு மிகப் பிடித்த டீச்சர் யார்” என்று கேட்டால் தயக்கமின்றி அவர்கள் என் பெயரைச் சொல்லி விடவேண்டும். மிகப் பெரிய திட்டம்தான்...
கொழும்புவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ரும்மான், பாராவின் எழுத்துப் பயிற்சி வகுப்பு மாணவி. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமையை அப்பட்டமாக விவரிக்கும் இக்கட்டுரை, பணத்தைக் குறித்த பழகிய பார்வைகளை அடியோடு புரட்டிப் போடுகிறது. சிம்பாப்வேயுடனும் லெபனானுடனும் கடும் போட்டியில் இருக்கிறது இலங்கை...












