ரஷ்யாவில் வேலைசெய்து வரும் வங்கதேசத் தொழிலாளர்கள் உக்ரைன் போரில் சண்டையிடக் கட்டாயப்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த தொழிலாளர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் போரில் அவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் மக்கள் வெளிநாட்டுப் போர்களில் பங்குகொள்வது ஒன்றும் புதிதல்ல. அப்போர்களில் அவர்கள் சுய விருப்பத்துடனே பங்கேற்றுள்ளனர். 1920களில் துருக்கியின் ஓடோமான் பேரரசு மாபெரும் இஸ்லாமியச் சக்தியாகக் கருதப்பட்டது. அச்சமயம் பங்களாதேஷ், பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த கிலாஃபத் குழு துருக்கிச் சுதந்தரப் போரில் கலந்துகொண்டது.
1979ஆம் ஆண்டு நடந்த சோவியத்-ஆஃப்கன் போரிலும் பங்களாதேஷிகள் பங்கேற்றனர். இம்முறை ஆஃப்கன் முஜாஹிதீன்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். பின்னாட்களில், 1990களின் மத்தியில் தோன்றிய தாலிபன் அமைப்பில் இணைந்தனர். 2013ஆம் ஆண்டு சில பங்களாதேஷிகள் ISIS அமைப்பில் இணைய சிரியாவுக்குச் சென்றனர்.














Add Comment