Home » கஞ்சா என்றால் அஞ்சு!
உலகம்

கஞ்சா என்றால் அஞ்சு!

கைக்கே பான் பன்ராஸ்வாலா என்ற பாடல், மொழி வேறுபாடுகள் கடந்து பட்டி தொட்டிகளிலெல்லாம் முழங்கிய காலம் ஒன்றுண்டு. டான், சில்சிலா போன்ற ஹிந்தித் திரைப்படங்களில் ஹோலிக் கொண்டாட்டங்களில் வெள்ளை நிறப் பானம் ஒன்றை அருந்தி மகிழ்ச்சியும் உல்லாசமுமாக மக்கள் ஆனந்தக் கூத்தாடுவதைக் காணலாம். அது பாங்க் எனத் தெரியாதவரும் உண்டா என்ன?

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இந்திய வரலாற்றில் பாங்க் ( Bhang) எனப்படும் கஞ்சா, அபினி குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. ரிக், அதர்வண வேதங்களிலும்கூட கஞ்சா, ஹெம்ப்,  தர்ப்பை போன்றவை நோய் வலி ஆகிய தீய சக்திகளை அழிக்க வல்லவை என்ற குறிப்புகள் இருக்கின்றன.

பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஆலகால விடத்தை உண்ட சிவன், கஞ்சாச் செடியின் இலைகளிலிருந்து தயாரித்த பால் கலந்த பாங்க் என்ற பானத்தைக் குடித்து மகிழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், இன்னமும் ஹோலி போன்ற விசேஷங்களில் பாங்க் தயாரித்துப் பிரசாதமாக வழங்குகிறார்கள். எல்லாம் வல்ல இறைவனுக்கே இளைப்பாற உற்சாக பானம் தேவைப்படுகிறபோது மனிதன் விட்டுவைப்பானா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!