கல்வியில் சிறந்த முதல் பத்து நகரங்களுக்குள் இடம் பிடிக்க இலக்கை அறிவித்துள்ளது துபாய். மத்தியக் கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை. அது உண்மை. இருந்தாலும் துபாய், சுற்றுலா முதற்கொண்டு சுற்றுச்சூழல், வணிகம் போன்ற பல துறைகளில் உலகளாவிய அளவில் சிறந்து வளர்ந்து வருகிறது.
உலகத்தின் மிக உயர்ந்த கட்டடம் முதல் ஏழு நட்சத்திரம் கொண்ட விடுதி வரை அமீரகத்தின் சிறப்பைப் பல துறைகளில் காணலாம் . இப்போது அந்த வரிசையில் கல்வியும் சேர இருக்கிறது . அதற்கான திட்டமிடல்கள் ஆரம்பித்துவிட்டன.
அமீரகத்தைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று பளிச்சென்று தெரியும். அவர்கள் செய்யும் திட்டமிடலும் அதற்காக எடுத்துக் கொள்ளும் காலமும் மிக முக்கியமானது. எந்த இலக்காக இருந்தாலும் சரியான வழியை நிறுவிச் செயல்படுத்துவதில் துபாய் அரசாங்கம் கில்லாடி.
பல கலாசாரங்கள் சார்ந்த மக்கள் அமீரகத்தில் வசிக்கிறார்கள். அதைப் போலவே பல நாடுகளுடைய பள்ளிகளும் இங்கு உள்ளன. இந்தியப் பள்ளிகளை எடுத்துக் கொண்டால் சி.பி.எஸ்,சி, ஸ்டேட் போர்ட் இருக்கிறது. பிலிபைன் பாடத்திட்டங்கள் கொண்ட பள்ளி, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற பல தனியார்ப் பள்ளிகள் உள்ளன. அதுமட்டுமின்றி அரேபியர்களுக்கான அரசாங்கப் பள்ளிகளும் உள்ளன.
Add Comment