Home » துபாய்

Tag - துபாய்

கோடை

வெயிலும் வாழ்வும் – ஒரு குடும்பக் கையேடு

வெயில் காலம் என்பது நம்ம ஊரில் ஒரு சீசன் மட்டுமே. ஆனால் அரபு நாடுகளில் வாழ்வோருக்கு அது சீசன் அல்ல. வீட்டில் நிரந்தரமாகத் தங்கி இருக்கும் ஓர் உபத்திரவ உறவினர். வம்பு செய்யும் உறவினரானாலும் வீட்டுக்குள் வரும் போது எப்படி வருவார்? வாய் நிறையப் புன்னகை, கை நிறைய பலகாரம், ‘உங்களுக்கு ஏதாவது உதவி...

Read More
உலகம்

ஏசி நெடுஞ்சாலை

துபாய் இப்போது உலகையே ஆச்சரியப்படுத்தும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதன் பெயர் ‘THE LOOP’. துபாயின் சாலைகளில் ஒவ்வொரு நாளும் வாகன நெரிசலில் சிக்கி, தங்கள் வாழ்நாளின் கணிசமான பகுதியைப் பயணத்திலேயே தொலைக்கும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது. உலகையே வியப்பில்...

Read More
உலகம்

ஓயாத போரும் நில்லாத வாழ்வும்

பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி மதியம் வரை இஃப்தார் நிகழ்வுகளைப் பற்றியும், போக்குவரத்து நெரிசலைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகம், அன்றைய மாலைப் பொழுதில் மெல்லிய பதற்றத்துக்குள்ளானது. அன்று காலையில் யாராவது ஜோசியர் ‘அடுத்த முப்பது நாட்களில் அமீரகவாசிகளின்...

Read More
உலகம்

கல்யாணத்துக்கு லைசென்ஸ் இருக்கா?

ஆயிரம் பொருத்தங்கள் இருந்தாலும் அரசாங்கம் லைசன்ஸ் கொடுக்காவிட்டால் அமீரகத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமண லைசன்ஸும் திருமணச் சான்றிதழும் ஒன்றல்ல. திருமண லைசன்ஸ் கிடைத்தால் மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். இருவர் காதலிக்கிறார்கள் அல்லது இரு வீட்டார் சம்மதத்துடன்...

Read More
இந்தியா

தவிக்க விடும் தங்கம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு , ஷார்ஜாவில் உள்ள இந்திய அமைப்பு (Indian Association of Sharjah) ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. அதில், துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன் மூலம் பூனைக்கு...

Read More
உலகம்

2கிமீ உயரத்தில் ஒரு மொட்டை மாடி

கனவுகளுக்கு எல்லை இல்லை என்ற வார்த்தைகள் மத்தியக் கிழக்கில் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புரூஜ் கலீஃபாவின் 828 மீட்டர் உயரம் இனி வரலாறாகிவிடும். அதற்குக் காரணம், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், புரூஜை விட இரண்டு மடங்கு உயரமான கட்டடத்தைக் கட்ட...

Read More
உலகம்

சிங்கிள் பெட்ரூம் உலகம் (Near the Sky)

துபாய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஆடம்பரம். அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள் இருந்தாலும் விண்ணைத் தொடும் புரூஜ் கலீஃபாவிற்கு முதலிடம் தர வேண்டும். சுற்றுலா செல்பவர்களிடம் காசு தாராளமாக இருந்தால் புரூஜில் உள்ள ‘அட் தி டாப்’, அதாவது நூற்று இருபத்து நான்காவது மாடிக்குச் செல்வார்கள்...

Read More
கல்வி

பள்ளித்தலம் அனைத்தும் ஏஐ செய்குவோம்!

அமீரகத்தின் அரசாங்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முடிவை அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மே 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த வருடம்...

Read More
உலகம்

அப்பன் சொத்தை அதிகரிக்கும் பிள்ளைகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திடீர் திடீரென்று ஏதாவதொரு சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பெரும்பாலும் புதுமையான திட்டமாக இருக்கும். இது பலகால வழக்கம். இப்போது சுற்றுலா மட்டுமல்ல; மக்கள் நெஞ்சைத் தொடும் விதமான வேறு பல நலத்திட்டங்களும் ஆண்டுக்கொன்றாவது அறிமுகமாகின்றன. அறிமுகமாவது பெரிதல்ல. அவை...

Read More
வாழ்க்கை

துபாய் முழுக்க ராஜுக்களும் லக்ஷ்மிகளும்

அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!