“இஸ்லாமிய நாட்டில் பெண்கள் நிலை பரிதாபம். கறுப்பு அங்கி அவர்களை அடக்கி வைத்திருக்கிறது” என்று உச்சுக் கொட்டாதவர்கள் அபூர்வம். ஆனால், துபாய் அரசர் ஷேக் முஹம்மது, “ஒரு பெண் இரவில் தனியாகச் சிறிதும் பயமின்றி நடந்து வருகிறாள் என்றால் அது ஐக்கிய அமீரக பூமியாகத்தான் இருக்கும்” என்று பெருமையாகச் சொல்கிறார்.
அவர் சொல்வது முற்றிலும் உண்மை என்பதை ஃபௌசியா போன்ற பெண்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே ஐக்கிய அமீரகத்தில் வாகனம் ஓட்டும் உரிமை பெறுவது சுலபமில்லை. இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. படிக்கும் போது பெயில் ஆகாதவர்கள்கூட பலமுறை தோல்வியைத் தழுவிய பின்னர்தான் உரிமம் வாங்க முடியும். அதற்குள் காலமும் திர்ஹாமும் தண்ணீரைப் போல் கரைந்துவிடும்.
ஃபௌசியா ஓர் இந்தியர். பிறக்கும் முன்பே தந்தையை இழந்தவர். இந்தியாவில் கல்லூரி முடித்துள்ளார். வணிகத்தில் பட்டம். ஆனால் பல ஆண்டுகளாகத் துபாய்வாசி. கடந்தாண்டு ரமலான் மாதத்தில் தாயும் இறந்துவிட்டார். மகன் இல்லாத குறையை தாய்க்கு எப்பொழுதும் வரக்கூடாது என்று தன்னாலியன்ற வரை எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக இருந்துள்ளார். தாயின் இழப்பிலிருந்து தன்னை மீட்டெடுக்க அவர் தேர்ந்தெடுத்த வழி ட்ரக் ஓட்டக் கற்றுக் கொண்டது.
Add Comment