Home » G இன்றி அமையாது உலகு – 22
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 22

22. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள்

செயற்கை நுண்ணறிவுதான் உலகை ஆளவிருக்கும் புதிய கடவுள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் கூகுளை சாட் ஜிபிடி (Chat GPT) சற்று முந்திச் சென்றுவிட்டது என்பதில் கூகுள் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சற்று ஏமாற்றம்தான். ஆனால் அது தாமதம்தானே ஒழிய, இன்னும் நிறைவாகச் சாதிக்க வேண்டிய ஏகப்பட்ட நுண்ணறிவுச் சங்கதிகளை நோக்கி நிதானமாகவும், விவேகமாகவும் அது நகர்ந்து வருகிறது. ஜெமினியின் கரம் சற்று ஓங்கத் தொடங்கியிருக்கிற இந்த வருடத்தில், மேலும் என்னென்ன புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலிகள், ஆய்வில் இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

1. எழுத்தாளர் செயலி

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரை உள்ளிட்டு, ஒரு தலைப்பையும் கொடுத்துவிட்டால், அவர் பாணியிலேயே ஒரு கட்டுரை எழுத முடியுமா? கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் முடித்துவிடலாம் என்று கூகுள் ஆய்வு நிறுவனம் இறங்கியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் அத்தனை எழுத்துகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அவரின் எழுதுமுறை, விஷயங்களை வாக்கியங்களாக அவர் மாற்றிச் சொல்லும் பாணி, அவர் மொழியைக் கையாளும் லாகவம் ஆகிய அனைத்தையும் புரிந்துகொள்கிறது. இவையனைத்தையும் நன்கு பழகிக்கொள்கிறது.

பிறகு எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும், அதே எழுத்தாளரின் பாணியில் ஜெமினியின் துணைகொண்டு, கதையோ கட்டுரையோ எழுதித் தள்ளிவிடுகிறது. இன்னும் தீவிர ஆராய்ச்சியில் இருக்கும் இந்தச்செயலி, எழுத்து தாண்டி, இசை, வரைகலை முதலான இன்னபிற கலைகளிலும் இறங்கிக் கலக்கவிருக்கிறது என்கிறது கூகுள் லேப்ஸ்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்