கிண்டி ரேஸ் கிளப், இந்தியாவின் பழமையான குதிரைப் பந்தய மைதானம். தற்போது பல நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, அதன் ஓட்டம் தொடருமா நிற்குமா என்ற சந்தேகத்தில் ஊசலாடி வருகிறது.
1777ஆம் ஆண்டு, பந்தயங்களை நடத்த அரசாங்கத்தால் 81 காணி (1 காணி = 57,499 சதுர அடி) நிலம் வழங்கப்பட்டது, அந்த நிலம் அடையாறு கிராமங்களான வெங்கடபுரம் மற்றும் வேளச்சேரியிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு 35 காணி நிலம் சேர்க்கப்பட்டு இரண்டு பந்தய மைதானங்கள் உருவாயின. ஒரு சிறிய மைதானம் குதிரைகளுக்குப் பயிற்சி தரவும், மற்றொன்று பந்தயங்களைப் பார்வையிடவும் பயன்படுத்தப்பட்டன.
1837இல் மெட்ராஸ் ரேஸ் கிளப் அமைக்கப்பட்டது. இது 1875 வரை செயல்பட்டு நின்றுபோனது. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 1887ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் செயல்படத் துவங்கியது. 1896 ஜனவரியில் ஐம்பது உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கிளப்பில் இப்போது ஸ்டான்ட் உறுப்பினர், போர்டு உறுப்பினர் என்று இரு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.














Add Comment