ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம் முற்றிலுமாகப் புறக்கணித்த, நிராகரித்த, அவமானப்படுத்திய, படாத பாடு படுத்திய ஒரு பெரும் வீராங்கனை அவர்.
விளையாட்டுத் துறையே ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலம். இதில் ஹமிதா பானு தேர்ந்தெடுத்தது மல்யுத்தத்தை. எந்த அளவிற்கு அவர் இந்தச் சமுதாயத்தோடு மல்யுத்தம் செய்திருந்தால் இந்தத் துறையில் கொடி நாட்டியிருப்பார் என்று எண்ணிப் பார்க்கலாம்.
Add Comment