நமது உடல் உறுப்புகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படும் போது அவற்றின் முக்கியத்துவத்தை நாம் பெரிது படுத்துவதில்லை. ஆனால் அவற்றில் ஒன்றை இழக்கும் போதுதான் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒருவர் ஒரு கால் அல்லது கையை இழக்கும் போது அவரது வாழ்க்கையில் பாரிய மாற்றங்களுக்கு அவர் தயாராக வேண்டும். தினமும் பலர் தங்கள் கால் கைகளைப் பலவித காரணங்களுக்காக இழக்கிறார்கள். இதற்கு விபத்திலிருந்து மருத்துவ ரீதியான தேவை வரை பல காரணங்கள் உண்டு.
செயற்கைக் கைகள், செயற்கைக் கால்கள் ஏற்கனவே உள்ள தொழில் நுட்பங்கள் தான். ஆனால் செயற்கையாகப் பொருத்தப்பட்ட கையினையோ காலையோ அது பொருத்தப்பட்டவரின் எண்ணங்களால் இயக்க முடியாது. முழங்காலுக்குக் கீழ், கால் துண்டிக்கப் பட்டவர் ஒருவர் செயற்கைக் காலைப் பொருத்தியிருப்பார். ஆனால் அவர் நடக்கும் போது இயற்கையாக இருக்காது. அவரின் காலின் மேல் பகுதியைத்தான் அவருடைய எண்ணங்களால் கட்டுப் படுத்த முடியும். அதனால் அவரது காலின் இயக்கத்தில் முழுமையான கட்டுப்பாடு அவரிடம் இருக்காது. இதே போலத்தான் செயற்கைக் கை பொருத்தப்பட்ட ஒருவரின் செயலும் இருப்பதை அவதானிக்கலாம்.
Add Comment