Home » தாமாகவே பங்சர் ஒட்டிக் கொள்ளும் டயர்கள்
இன்குபேட்டர்

தாமாகவே பங்சர் ஒட்டிக் கொள்ளும் டயர்கள்

நாம் அனைவரும் எம் வாழ் நாளில் பலவிதமான காயங்களை எமது உடலில் உருவாக்கியிருப்போம். பெரும் எலும்பு முறிவுகள் போன்ற காயங்களுக்கு மருத்துவ உதவி தேவை. ஆனாலும் எமது உடலில் ஏற்படும் பொதுவான சிறு காயங்களுக்கு நாம் மருத்துவரைத் தேடிப் போவதில்லை. உதாரணமாக கீழே விழும்போது ரத்தம் கசியுமளவு தோல் உரசப்படுகிறது. அது சில நாள்களில் தானாகவே குணமடைந்து விடுகிறது. காயமேற்பட்ட இடத்தில் சிறு வடு தென்படலாம். ஆனாலும் புதிய தோல் கலன்களால் பாதிக்கப்பட்ட இடத்தை நிரப்பும் இயற்கைத் திறன் கொண்டதாக நமது உடல் இருக்கின்றது. எலும்பு முறிவு போன்ற பெரும் காயங்களுக்குச் சத்திர சிகிச்சை செய்தாலும், சத்திர சிகிச்சைக்குப் பிறகு அந்தக் காயங்களைப் பழுதுபார்க்கும் திறன் நமது உடலுக்கு உண்டு. இது உலகில் உயிர்வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான இயற்கைத் திறன்.

தன்னைத்தானே பழுதுபார்க்கும் இயற்கைத் திறன் பொதுவாக மனிதர்களால் உருவாக்கப் பட்ட செயற்கைப் பொருள்களுக்கு இல்லை. அதனால் நாம் பயன்படுத்தும் அன்றாடப் பொருள்கள் பலவற்றிலும் ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது அதனை நாம் திருத்த வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அது நேர விரயம் மட்டுமல்லாமல் அநாவசியச் செலவினையும் ஏற்படுத்துகிறது. இயற்கையில் உயிரினங்களின் கலன்கள் போல் நாம் உருவாக்கும் செயற்கைப் பொருள்களும் தம்மைத் தாமே சுய சிகிச்சை செய்து திருத்தம் செய்யும் திறன் கொண்டவையாக இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? அப்படியான பொருள்களை உருவாக்கக் கூடிய சுய சிகிச்சை செய்யும் மூலப்பொருள்கள் பலவற்றை விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!