Home » பிள்ளையாரைக் காணவில்லை
கலாசாரம் தமிழ்நாடு

பிள்ளையாரைக் காணவில்லை

திருவாரூர் இங்க் பிள்ளையார் ஒரு காலத்தில் தியாகேசரைவிடப் பிரபலம். ஆனால் காலம் கடவுளையும் சும்மா விட்டு வைப்பதில்லை.

ஆற்று நீரை வாயில் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்த கண்ணப்ப நாயனாரின் கதையை யாரோ ஒரு பள்ளிக்கூட மாணவன் கேட்டுத்தான் அப்படியொரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்க வேண்டும். திருவாரூர் கமலாலயக் குளக்கரையில் அமைந்துள்ள பிள்ளையாருக்குத் தனியே ஒரு தல புராணம் எழுதினால் அபிஷேகப் பொருளாக இங்க்கைத்தான் குறிப்பிட்டாக வேண்டி இருக்கும்.

திருவாரூர் கமலாலயத்தில் அறுபத்து நான்கு தீர்த்தக் கட்டங்கள் இருப்பதாக ஐதீகம். கிழக்குக் கரையில் ஏழாவதாக இருப்பது தட்சக் கட்டம். ஈஸ்வரனை எதிர்த்து தட்சன் யாகம் செய்தார். கோபம் கொண்ட சிவனின் அம்சமான வீர பத்திரரால் அறைபட்டு முகம் நசுங்கிவிட்டது. முனிவர்களின் ஆலோசனையினால் தட்சன் இந்த தீர்த்தக் கட்டத்தில் நீராடி இடையூறு நீங்கினார் என்று மேற்கு நோக்கிய கல்வெட்டில் உள்ளது. அங்கே அவர் ஒரு லிங்கமும் வைத்து வழிபட்டிருக்க வேண்டும். ஆனால் எக்காலத்திலோ மாணவர்கள் அந்த இடத்துக்குப் பின்புறம் கிழக்கு நோக்கி இருந்த பிள்ளையாரை ஹீரோ ஆக்கிவிட்டார்கள்.

தேர்வுக்கு உதவும் பிள்ளையார். வெற்றிக்கு உதவும் பிள்ளையார். மாணவர்களுக்கான பிரத்தியேகப் பிள்ளையார்.

பிள்ளையாரின் மீது இங்க் தெளித்தோ, ஊற்றியோ வழிபட்டுவிட்டுத் தேர்வு எழுதச் சென்றால் வெற்றி நிச்சயம், அதிக மதிப்பெண்கள் நிச்சயம் என்பது திருவாரூர் முழுதும் ஒரு காலத்தில் மாணவர் சமூகத்தினரிடையே இருந்து வந்த ஒரு நம்பிக்கை.

எல்லா நம்பிக்கைகளுக்கும் ஒரு கதை இருக்கும் அல்லவா? அப்படி இந்த இங்க் பிள்ளையாரின் பூர்வ சரிதத்தை அறிவதற்குப் பலரிடம் பேசிப் பார்த்தோம்..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • கட்டுரை ரொம்ப ரொம்ப சுவாரசியமாக இருந்தது. இந்த மாதிரி வட இந்தியாவில விசா பிள்ளையார் கூட இருக்கார்.

  • கமலாலய குளத்தை பார்த்து வியந்திருக்கிறேன்.குளக்கரை பிள்ளையாரை வணங்கியும் வந்திருக்கிறேன்.இப்பதான் இந்த கதையை அறிகிறேன்.வெகு சுவாரஸ்யம்.ஆனால் பாவம் பிள்ளையார்!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!