லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் 2001ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது அந்த வழக்கு. விசாரணைக் கூண்டில் அறுபத்தொரு வயது மனிதர் நின்றிருந்தார். அவர் கோடிக்கணக்கான வாசகர்களின் அபிமான எழுத்தாளர். பிரபுக்கள் சபையின் உறுப்பினர். பெரும் கவனத்தையும் ஈர்த்த அந்த வழக்கில், நீதிபதி அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை அளித்தார்.
ஜெஃப்ரே ஆர்ச்சரின் மிகப் பெரிய கதை அன்று முடிந்தது. அது அவர் எழுதிய கதை அல்ல, அவருடைய வாழ்க்கையின் கதை. அவர் எழுதிய கதைகளில் இருந்ததைப் போலவே பல திருப்பங்கள் கொண்டதுதான் அவர் வாழ்க்கையும்.
1940 ஏப்ரல் மாதம் லண்டனில் ஜெஃப்ரே ஆர்ச்சர் பிறந்தார். இரண்டே வாரங்களில் குடும்பம் சாமர்செட்டுக்கு நகர்ந்தது. வெஸ்டன்-சூப்பர்-மேர் என்ற கடலோர ஊரில் வளர்ந்தார்.















Add Comment