Home » வயது 19, சொத்து 100 கோடி
ஆளுமை

வயது 19, சொத்து 100 கோடி

பிரஞ்சலி அஸ்வதி

பதின்மப் பருவத்தினர் எதிர்காலக் கனவுகளை நனவாக்கத் தேர்வுகளுக்கும் கல்லூரிக்கும் தயாராகிக் கொண்டிருப்பார்கள். ஆனால் பத்தொன்பது வயது பிரஞ்சலி அஸ்வதி, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர்களுக்கு எந்த எல்லையும் பெரிதாகத் தெரிவதில்லை. ஏழு வயதிலேயே அஸ்வதியின் கனவுக்கு விதை போடப்பட்டது. அவரது தந்தை அவருக்குக் கணினியை அறிமுகப்படுத்தினார். அந்த வயதிலேயே பிற பாடங்களுடன் கணினி அறிவியலையும் அஸ்வதிக்குக் கற்பிக்க வேண்டும் என்பது அவருடைய தந்தையின் விருப்பம்.

அஸ்வதிக்குப் பதினொரு வயதாக இருக்கும் போது அவருடைய குடும்பம் அமெரிக்காவிலுள்ள ஃப்ளோரிடாவுக்கு இடம் பெயர்ந்தது. அங்கு அவருக்குக் கணிப்பொறி அறிவியல் கற்கவும் கணிதப் போட்டிகளில் பங்கேற்கவும் ஆர்வம் அதிகரித்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!