Home » ஜெஃப்ரே ஆர்ச்சர்: சொன்ன சொல்
ஆளுமை

ஜெஃப்ரே ஆர்ச்சர்: சொன்ன சொல்

ஜெஃப்ரே ஆர்ச்சர்

உலகம் முழுவதும் ஒருவர் எந்த நாட்டில், எந்த மொழியில், இலக்கியம், வணிகம் என்று எப்படிப்பட்ட நூல்களை எழுதுகிற எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவருக்கு மிகவும் அச்சம் தருகிற இரண்டு சொற்கள்: Writer’s Block.

ஏனெனில், எழுத்துத் தடை, சிந்தனைத் தடை, படைப்பூக்கத் தடை என்று பலவிதமாக அழைக்கப்படுகிற Writer’s Block ஒருவருக்கு வந்துவிட்டால், அவரால் ஒரு வரிகூட உருப்படியாக எழுதமுடியாது. அவர் விதவிதமாக மாற்றி, மாற்றி என்னதான் எழுதிப் பார்த்தாலும் எதுவும் தேறாது. ‘இத்தனை நாளாக நாம் எழுத்தாளர் என்ற பெயரில் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ!’ என்கிற தேவையில்லாத ஐயமெல்லாம் வரும். கழிவிரக்கத்தில் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு பாயைப் பிறாண்டத் தோன்றும்.

இப்படி எழுத்தாளர்களின் பெரும் எதிரியாகப் பார்க்கப்படுகிற Writer’s Blockஐத் தன்னுடைய ஒரு வீட்டுக்குப் பெயராகச் சூட்டியவர் ஜெஃப்ரே ஆர்ச்சர். ‘எல்லாரும் ரைட்டர்’ஸ் ப்ளாக் வந்தா எழுத முடியாதுன்னு சொல்வாங்க. ஆனா, எனக்கு ரைட்டர்’ஸ் ப்ளாக்குக்கு வந்தால்தான் எழுதவே வரும்’ என்று நகைச்சுவையாகச் சொல்லி மகிழ்ந்தவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!