2024 ஆம் ஆண்டினை நாம் துபாயில் துபாய் ஃபிரேம் கட்டடத்தின் முன்னால் நின்று வாண வேடிக்கைகளை ரசித்துக் கொண்டு வரவேற்றோம். இங்கிலாந்தில் வாண வேடிக்கைகளைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் சில மணி நேரங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு பார்க்குமளவுக்கு ஆர்வமில்லை. அதனால் இவ்வாண்டு துபாய் சென்ற போது வாண வேடிக்கைகளைப் பார்ப்பது என்பது முக்கியமான நிகழ்வாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
சென்ற ஆண்டு போலவே இவ்வாண்டும் எனது மெட்ராஸ் பேப்பர் பங்களிப்பு சிறப்பாகத் தொடர்ந்தது. இன்குபேட்டர் எனும் ஒரு பத்தியில் வருங்காலத் தொழில்நுட்பங்கள் பற்றித் தொடர்ந்து முப்பது வாரங்கள் எழுதினேன். அதை விடத் தற்போது எனதன்பே, எருமை மாடே எனும் தலைப்பில் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சென்ற ஆண்டு முடிவில் இரண்டு அபுனைவுப் புத்தகங்கள் எழுத வேண்டும் என்று திட்டமிட்டேன். இன்குபேட்டர் பத்தி எழுதி முடித்த போதும் அதனை ஆண்டு முடிவதற்குள் புத்தக வடிவாக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் இவ்வாண்டு அபுனைவுப் புத்தகங்கள் ஏதும் வரவில்லை.
Add Comment