Home » காலை உணவு நாலாயிரம் ரூபாய்
உணவு

காலை உணவு நாலாயிரம் ரூபாய்

அரபிகளின் காலை உணவு எப்படி இருக்கும் என்று ருசித்து அறிய மைனா ஆசைப்பட்டாள். ஏனெனில், அரபி என்ற ஒரு குடையின் கீழே பல மத்தியக் கிழக்கு நாடுகளின் உணவு வழக்கம் வந்துவிடுமல்லவா?

லெபனீஸ் உணவு, எகிப்து உணவு, டர்கிஷ் உணவு என்று இவற்றுக்குப் பெயர்தான் வேறே ஒழிய அடிப்படையில் ஒன்றுக்குள் மற்றொன்றுதான் இருக்கும். சுருங்கச் சொன்னால் நம்ம ஊர் இட்லி மாவை வைத்து, இட்லி, தோசை, ஊத்தப்பம், பணியாரம் எல்லாம் போடுவமே அந்தக் கதைதான்.

கேள்விப்பட்ட இந்தத் தகவலை உறுதி செய்துகொள்ளத் தோழியுடன் சென்ற ஞாயிறு அன்று காலை புறப்பட்டாள். முன்னதாக ‘ஆத்தண்டிக் எமிராத்தி ப்ரேக் ஃபாஸ்ட்’ என்று ஒரு விளம்பரத்தில் கண்டிருந்தது அவளைத் தூண்டிக்கொண்டே இருந்தது. எமிரேட் ஏர்லைன்ஸ் தெரியும். அதென்ன எமிராத்தி ப்ரேக் ஃபாஸ்ட்?

அவள் வசிக்கும் துபாயில் எங்கு நோக்கினும் லெபனீஸ் உணவகங்களே அதிகம். அங்கெல்லாம் இந்த எமிராத்தி காலை உணவு இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள். பிறகு கூகுளில் தேடி ‘அரபிக் டீ ஹவுஸ்’ என்ற கடையைப் பிடித்தாள்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!