சென்ற இதழ் ‘மெட்ராஸ் பேப்பரில்’ எந்தெந்த நாட்டுக்காரர்கள் என்னென்ன சாப்பிடுகிறார்கள் என்பதை விலாவாரியாக எழுதியிருந்தார்கள். என்ன அக்கிரமம்? ஓர் அக்மார்க் தமிழன் மொழி, காலநிலை தொடங்கி சகலமான சங்கதிகளிலும் சம்பந்தமே இல்லாத புவியின் மறு பகுதிக்குப் போய் அங்கே இட்லி தோசை முருங்கைக்காய் சாம்பாருக்கு ஏங்கித் தவிப்பது ஏன் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லை? ‘இந்த’ ஒருவனை விடுங்கள். உலகில் எத்தனை எத்தனை ஒருவன்கள் இப்படி நாக்கைச் சாகடிக்கும் பிராந்தியங்களில் நாலு காசு பார்க்கப் போய், சகித்துக்கொண்டு வாழ்ந்து தீர்க்கிறார்கள் தெரியுமா? அப்பேர்ப்பட்ட சமூகத்தைச் சென்ற இதழ் புறக்கணித்த பாவத்துக்கு இந்தக் கட்டுரையை நீங்கள் படித்தே தீர வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















Add Comment